Spread the love

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரைவிமர்சனம்

 

14 வருடத்துக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதியை அடிப்படையாகக் கொண்டு தனது பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்காக ஒரு பழங்குடித் தலைவர் அவருடன் இரண்டு துணை ஆட்களுடன் பயணிக்கிறார்.

எமசிங்கபுரம் என்ற குறிப்பிட்ட இடத்தைப் பற்றி கதை தொடங்குகிறது, அதை விஜய்சேதுபதியின் குரலில் அறிமுக படுத்திய விதம் பார்க்க கேட்க மிக அழகாக இருக்கிறது.

படத்தின் தொடக்கமே விஜய் சேதுபதி, ரமேஷ் திலகர் மற்றும் ராஜ் ஆகியோர் சென்னைக்கு தங்கள் பாரம்பரிய வேலைகளைச் செய்வதற்கு எங்கு செல்ல வேண்டும் என்பதைத் அவர்களில் குல தெய்வமான எமன்னிடம் ஆசிர் பெற்று விட்டு செல்கிறார்கள்.

சென்னை வந்து பல விதமான வித்தியாசமான வேடங்களில் நகைகள் ,பணங்களை திருடுகிறார்கள் இவர்களில் திருட்டில் ஒரு வலுவான கருத்து இருக்கும் யாரையும் அடிக்க மாட்டார்கள்,கொலை செய்ய மாட்டார்கள்.

இதற்கு இடையில் கல்லூரியில் படிக்கும் நிகாரி மற்றும் கவுதம் கார்த்திக் விஜய்செதுபதியின் வாழ்க்கை வட்டத்திற்குள் வருகிறார்கள்.

ஒரு கட்டத்தில் நிகாரிகாவை கடத்த வேண்டும் என்று விஜய்சேதுபதி முடிவு செய்கிறார் அது ஏன் என்று திரையில் சென்று பாருங்கள்.

எப்படியும் நிகாரிகாவை கடத்த வேண்டும் என்று இருக்கும் விஜய்சேதுபதிக்கு எமனின் உதவியாக கவுதம் கார்த்திக்கே வருகிறார் விளையாட்டாக நிகாரிகாவை கடத்த சொல்ல அவர் நிஜமாகவே கடத்தி எமசிங்கபுரம் கொண்டு செல்கிறார்.

அவர் ஏன் கடத்தினார் விஜய்சேதுபதிக்கு யார் நிகாரிகா கவுதம் கார்த்திக் நிகாரிகாவுடன் சேர்ந்தாரா,விஜய்சேதுபதியிடம் இருந்து மீட்டு எடுத்தாரா என்பதை கல கல காமெடி கலந்து சொல்லுவதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் நடிகர் நடிகைகள் பற்றி

விஜய்சேதுபதி வழக்கம்போல ஒரு மாஸ் ஹீரோ போல வலம் வருகிறார் அதுவும் குறிப்பாக படத்தின் இவரின் அறிமுக காட்சி அரங்கில் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளக்கிறது எந்த ஒரு அலட்டலும் இல்லாத அறிமுகம்.

படத்தில் சேதுபதி தெலுங்கு எல்லாம் பேசுகிறார் பார்க்கவே அருமையாக இருக்கிறது அதுவும் அந்த Omlet திருடி மாட்டிக்கொள்ளும் போதும் சரி ஒரு Omlet கூட உன்னால சரியா திருட முடியல நாயே நாயே நாயே திட்டும் போதும் சரி சிரிப்பு வெடிதான்.

படத்தின் இன்னொரு நாயகன் கவுதம் கார்த்திக் இயக்குநர் கூறியது போல இவருக்கு ஒரு புதுமையான ஒரு ரோல். ஐவரும் டானியலும் சேர்ந்து செய்யும் காமெடிக்கு எல்லையே இல்லை.

கவுதம் – சேதுபதி இருவருக்கும் சரி பாதி ரோல் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சேதுபதியிடம் வந்து வம்பாக மாட்டிக்கொண்டு அடி வாங்குவது என கவுதம் கார்த்திக் சிரிக்க வைக்கிறார் ரசிகர்களை.

வித்தியாசமான திரைக்கதையை நம்பி அதை எக்கச்சக்கமான நகைச்சுவை காட்சிகளையும் சேர்த்து எடுத்திருக்கிற டைரக்டர் பாராட்டுக்குரியவர். விஜய் சேதுபதியும், அவரோட ஒன் லைனர்ஸும் செம்ம.விஜய் சேதுபதி வேற லெவல்

நாயகிகளாக வரும் நிகாரிகா மற்றும் காயத்ரி அழகான அளவான நடிப்பு குறிப்பாக நிகாரிகா அறிமுக படம் என்றே தெரியாத அளவிற்கு அப்பிடி ஒரு நடிப்பு தான் ஏன் கடத்தப்பட்டோம் என்று தெரியாமல் இருப்பதும் உண்மை தெரிந்து உண்மை தெரிந்ததும் அதிர்ச்சி அடைகிறார்.

காயத்ரி படத்தின் இன்னொரு நாயகி இவருக்கு இன்னும் சற்று கூடுதல் காட்சிகள் கொடுத்து இருக்கலாமோ என்று தோனுகிறது.

வித்தியாசமாக முயற்சி செய்துள்ளதாகக் கூறி சில இயக்குனர் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் ஆறுமுக குமார் தைரியமாக வித்தியாசமாக படத்தை அளித்துள்ளார். விஜய் சேதுபதி எப்படி இப்படி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்கிறார் என தெரியவில்லை.

பாடல்கள் படத்தின் காட்சிகள் ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது.

மொத்தத்தில்’ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ குடும்பத்துடன் சென்று கவலை மறந்து ஜாலியாக ரசிக்க சிரித்து மகிழ ஒரு நல்ல நாளாக இருக்கும்.

  • Thanks to cinetime