மாஸ் ஹீரோக்களின் படங்கள் இல்லாமல் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்கள் இல்லை. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு மொத்தம் 6 படங்கல் வெளியாவது உறுதியாகியிருக்கிறது.
முன்னதாக இந்த ஆண்டு 2018 பொங்கலுக்கு 9 படங்கள் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
அந்த பட்டியலிலிருந்து தற்போது இரும்புத்திரை, கலகலப்பு – 2, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஆகிய படங்கள் வெளியேறி ஜனவரி 26 ஆம் தேதிக்கு சென்று விட்டன.
மீதமுள்ள ஆறு படங்களில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், குலேபகாவலி, மதுர வீரன் ஆகிய படங்கள் சென்சார் செய்யப்பட்டு விட்டன.
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், மற்றும் மன்னர் வகையறா படங்கள் சென்சாருக்கு விண்ணப்பித்து விட்டு, சென்சார் அதிகாரிகளின் பார்வைக்காக காத்திருக்கின்றன.
சென்னை மண்டல தணிக்கை அதிகாரி மதியழகன் மாற்றப்பட்டு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டு, புத்தாண்டு அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதே வேளையில் பழைய அதிகாரி மதியழகனுக்கான மாறுதல் ஆணை வராத காரணத்தால், அவரும் பணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
எனவே மேற்கொண்ட மூன்று படங்களையும் யார் பார்வையிடுவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த பஞ்சாயத்து தீர்ந்த பின்னர் வரிசைப்படி தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், மன்னர் வகையறா படங்களை அதிகாரிகள் பார்வையிடுவார்கள். அதன் பின்னர் திட்டமிட்டபடி இந்த ஆறு படங்களும் பொங்கலுக்கு வெளியாகும்.